12/8/10

மகரிஷி நூற்றாண்டு





வாழ்க வையகம் வாழ்க வளமுடன் 

என்னும் மந்திர வாசகத்தை....
அருளியவரும்,எண்ணம் , சொல் ,செயலால் எவருக்கும் தீங்கு செய்யாத பெருவழியைக் காட்டி விட்டுப் போனவருமான பெருமகனார் வேதாத்திரி மகரிஷி அவர்களின்  நூற்றாண்டு விழா ஆகஸ்டு14ஆம் நாள் தொடங்கவிருக்கிறது.
நாடு,மதம்,மொழி,இனம் ஆகிய குறுகிய எல்லைக் கோடுகள் அனைத்தையும் கடந்த மாபெரும் தவச் செல்வர் வேதாத்திரி மகரிஷி அவர்கள் . தனி மனிதன் மட்டும் உய்வு பெறுவதற்கான ஆன்மீகமல்ல வேதாத்திரி மகரிஷிகளின் ஆன்மீகம்.

தனிமனிதனோடு இயற்கையையும்,சமூகத்தையும் ஒருங்கிணைத்து 

அவற்றின் ஒத்திசைவில் விளையும் ஒருமைப்பாட்டை யோகமாகக் காணும் வழியே வேதாத்திரியம் காட்டும் வழி.
மைய அரசு , மகரிஷியின் நினைவாகச் சிறப்பு அஞ்சல் தலை வெளியிட்டு இந்த மண்ணின் மைந்தருக்குப் பெருமை சேர்க்க முன் வந்திருக்கிறது
விழா நிகழ்வுகளில் பங்கு பெறுவதோடு மகரிஷி கனவு கண்ட போரில்லா நல்லுலகத்தை நனவாக்க உறுதி பூணுவதே அம் மகானின் நினைவுக்கு நாம் ஆற்றும் கைம்மாறாக இருக்க இயலும்.



சென்னையில் நிகழவிருக்கும் மகரிஷி நூற்றாண்டு நிகழ்ச்சிகள் 
நாள்                          :  14.08.2010 சனிக்கிழமை
நேரம்                        :  காலை 10.30 மணி முதல் 11.00 மணிவரை
இடம்                         :  சென்னை - ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டு அரங்கம்
காலை  
10.30 மணி :தமிழ்த்தாய் வாழ்த்து, தவம்
வரவேற்பு: அருள்நிதி.எஸ்.கே.எம்.மயிலானந்தன் .
                      தலைவர்,உலக சமுதாய சேவா சங்கம்.

முன்னிலை: 
பத்மபூஷண் அருட்செல்வர் டாக்டர் நா. மகாலிங்கம்,                .                                 தலைவர், அறிவுத்திருக்கோயில், ஆழியாறு
விழாத் தலைமை,வாழ்த்துரை: 
 தமிழக முதல்வர் கலைஞர் மு. கருணாநிதி அவர்கள்                              
சிறப்பு அஞ்சல் தலையை
 வெளியிட்டுச் சிறப்புரை : 
மாண்புமிகு மத்திய அமைச்சர் திரு.ஆ.இராசா 

தகவல் மற்றும் தொழில்நுட்பத்துறை, புதுடெல்லி


கருத்தரங்கம்

நாள்                   : 14.08.2010 சனிக்கிழமை
நேரம்                 : காலை 11.00 மணி முதல் இரவு 07.30 மணி வரை
இடம்                  : ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டு அரங்கம், சென்னை.
நிகழ்ச்சி நிரல்
தமிழ்த்தாய் வாழ்த்து, தவம்
வரவேற்புரை    : 

டாக்டர். எஸ். வி. பாலசுப்பிரமணியம் ,நிர்வாக அறங்காவலர், அறிவுத்திருக்கோயில், ஆழியாறு.

தலைமையுரை: 
மாண்புமிகு அமைச்சர்முனைவர் க. பொன்முடி,
உயர் கல்வித்துறை.
சிறப்புரை:மாண்புமிகு அமைச்சர் திரு. தங்கம் தென்னரசு
பள்ளிக் கல்வித்துறை.
முன்னிலை: மேயர் திரு.மா.சுப்பிரமணியன்,
சென்னை மாநகராட்சி, சென்னை.
வாழ்த்துரை :பத்மஸ்ரீ கவிப்பேரரசு வைரமுத்து
                       : பத்மஸ்ரீ டி.ஆர். கார்த்திகேயன் அவர்கள்,
                       முன்னாள் சி.பி.ஐ. இயக்குனர், புதுடெல்லி.
கருத்துரை : முனைவர் ஜி. திருவாசகம் அவர்கள்
                               துணைவேந்தர், சென்னை பல்கலைக்கழகம்.

                     : முனைவர். ஆர்.டி. சபாபதி மோகன் அவர்கள்,
                            துணைவேந்தர், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம்.

                     : முனைவர். சி. சாமிநாதன் அவர்கள்,
                             துணைவேந்தர், பாரதியார் பல்கலைக்கழகம்.






நன்றியுரை:பேராசிரியர். திருடி.என். அருளானந்தன் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LinkWithin

Related Posts with Thumbnails